இலங்கை அதிபர் மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடந்த 9-ஆம் தேதி போராட்டம் நடத்திய இலங்கை மக்கள் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகைக்குள் புகுந்து முகாமிட்டனர். மேலும் அதிபர் மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்தும் போராட்டக்காரர்கள் சமைத்தும் சாப்பிட்டனர். அத்துடன் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தியுள்ளனர். இதனால் கோத்தபய ராஜபக்சே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். அதன்பின் இலங்கையின் அதிபர் மாளிகை வளாகத்திலிருந்து போராட்டக்காரர்கள் முற்றிலுமாக கலைந்தனர். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து மாளிகைக்குள் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது.