மெக்சிகோவில் பெண்களுக்கு எதிராக வன்முறைகளை தடுக்க கோரி நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது.
உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் அதேவேளையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மெக்ஸிகோவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் மாளிகை முன்பு பேரணியாக சென்று இந்த போராட்டத்தை நடத்தியதால் ஏராளமான போலீசார் மாளிகையை சுற்றி குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்கு இரும்பு சுவர்கள் அமைக்கப்பட்டு பெண் போலீசாரும் குவிக்கப்பட்டனர். ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் கிடைத்த பொருட்களை வைத்து இரும்பு சுவரை அடித்து தகர்க்க முயற்சி செய்ததால் கலவரம் மூண்டது.இந்த கலவரத்தில் 62 பெண் காவல் அதிகாரிகளும், 19 பெண் போராட்டக்காரர்களும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் மெக்சிகோவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.