மெத்தையில் ஏறி இளைஞர்கள் குத்துச்சண்டை விளையாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு போன்ற பல காரணங்களினால் அதிபரை பதவி விலக வலியுறுத்தி இலங்கை மக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டக்காரர்கள் நேற்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு சூறையாடினர். இந்நிலையில் அதிபர் மாளிகையில் இருந்து எடுத்த பணத்தை போராட்டக்காரர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கி இருந்து நீச்சல் குளத்தில் குளிப்பது, தரையில் அமர்ந்து டிவி பார்ப்பது போன்று மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இதில் சில இளைஞர்கள் அதிபர் மாளிகையில் உள்ள பெட்ரூமில் நுழைந்து அங்குள்ள மெத்தையில் குத்துச்சண்டை விளையாடியுள்ளனர். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.