அதிபர் வேட்பாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வரும் நிலையில், இறுதி கட்டத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது லிஸ் டிரஸ் திடீரென கைகளால் முகத்தை மறைத்துக் கொண்டு ஐயோ கடவுளே என அலறினார்.
இதன் காரணமாக நிகழ்ச்சி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் லிஸ் டிரஸ் அலறியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த Kate என்ற பெண்மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்த பெண்ணை ரிஷி சுனக் தாங்கிப் பிடித்துள்ளார். இதை பார்த்த லிஸ் டிரஸ் ஐயோ கடவுளே என அலறியுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் kate தற்போது நலமுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.