அரண்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவம் ஐபிசி 299 போடக்கூடிய கேஸ்ஸா என்றால் கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. அப்புக்கும் இன்னொரு பையனுக்கும் சண்டை நடக்குது, வாக்குவாதம் நடக்குது. ஒரு அடி அடிக்கலாம். அடித்து போடா… இந்த ஜாதி பையலா ? ஓட்டு கேட்பியா என்று அடிக்கலாம், சின்ன காயம் வரலாம். அப்படி என்றால் வாக்குவாதத்தில் முற்றி நடந்த ஒரு சின்ன சண்டை.
ஆனால், சூர்யா இந்த ஊரைச் சார்ந்தவன் என்று தெரிந்தபிறகு, ஆட்களை திரட்டி இருக்கிறார். அந்த ஒரு ஊரில் மட்டுமல்ல. பெருமாள் ராஜ் பேட்டையில் இருந்து வந்திருக்கிறான். பக்கத்து ஊரில் இருந்து வந்திருக்கிறார். அதுக்கு பக்கத்து ஊரில் இருந்து வந்து இருக்கின்றார்கள். ஒரு இருபது பேரை இவர்கள் திரட்டி இருக்கிறார்கள். இந்த மாதிரி பசங்க மாட்டிக்கொண்டார்கள் என ஆட்களை திரட்டி உள்ளார்கள்.
அதிலும் சூர்யாவுக்கு தொலைபேசியில் பேசி சமாதானத்திற்கு வா என்று தான் முதலில் கூப்பிடுகிறார். அப்பு என்பவன் தகவல் கொடுத்தவுடன் ஓடவில்லை. சூர்யா போனில் கேட்டிருக்கிறான்…. ஏன் என் தம்பியை அடித்தீர்கள் என்று கேட்டதற்கு அது தெரியாமல் நடந்துவிட்டது. வாங்க சமாதானம் பேசலாம் என்று சொல்லிட்டு ஆட்களை திரட்டி இருக்கிறான்.
ஏற்கனவே ஒரு வெறுப்பு இருக்கிறது. சோகனுரிலும், செம்பேட்டிலும், பலகிராமங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் கௌதம் சென்னாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து இருக்கின்றார்கள். வீடு எல்லாம், தெருவெல்லாம் பானை சின்னத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். அதிமுக வேட்பாளர் மணல் மாபியாவுக்கு தலைமை தாங்கக்கூடிய ஒரு தலித்துதான். அவரை தலித்து என்று சொல்ல முடியாது.
ஏனென்றால் இவர்கள் எல்லாம் அரசியல்காக சாதிவெறியர்களோடு எளிதில் சமரசமாகக் கூடியவர்கள். ஆகவே அதிமுக வேட்பாளரை ஊருக்குள் விடாமல், தடுத்து இருக்கிறார், இதுவும் நடந்து இருக்கிறது. அதே சோகனுர் வழியாக இந்த மணல் திருட்டு கும்பல் ,பலமுறை லாரி லாரியாக மணல் அள்ளிக் கொண்டு ஊர் வழியாக…. காலனி வழியாக போகிறார். அப்பொழுது தலித் மக்கள் குடியிருக்க கூடிய தெருவில் கடந்து போகும் போது…… இந்த இளைஞர்கள், படித்த இளஞர்கள், அரசியல் புரிதல் உள்ள இளைஞர்கள், புரட்சியாளர் அம்பேத்கரை உள்வாங்கிய இளைஞர்கள், துணிச்சலோடு எங்க தெருவில் போகக்கூடாது என கேட்டுள்ளார்கள்.
ஏன் அடிக்கடி இப்படி வேகமாக வருகிறாய் என சொல்லியுள்ளார்கள். அதிலும் அந்த சாதி வெறியர்கள், குடிகாரர்கள் பைக்கை எடுத்து கொண்டு வந்தால், அந்த தெரு வழியாக வரும்போது வேகமாக ஓட்டுவது, ஒளியை அதிகமாக எழுப்புவது, மிக வேகமாக போவது. அப்போது இளைஞர்கள் தடுத்து, ஒழுங்கா போ…. இனிமேல் இப்படி சத்தம் போடாதே என்று கண்டித்து இருக்கிறார்கள். மணல் லாரியை கண்டித்து இருக்கிறார்கள்.
இதனால் இந்த இளைஞர்கள் தங்களுடைய தொழிலுக்கு எதிராக இருக்கிறார்கள், தங்களுடைய சாதிக்கும் எதிரானவர்களாக இருக்கின்றார்கள், தங்களுடைய கட்சிக்கும் எதிரானவர்கள், தங்களுடைய கூட்டணிக்கும் எதிரானவர்கள், தங்களுடைய வெற்றிக்கும் எதிரானவர்கள், தாங்கள் ஆதரிக்கக் கூடிய ஒரு கொத்தடிமைக்கும் இவர்கள் எதிராக இருக்கிறார்கள் என்ற ஆவேசத்தில் அடியாட்களை, ரவுடிகளை திரட்டுகிறார்கள். அதில் அதிமுக காரர்களும் இருக்கிறார்கள், பாமக காரர்கள் இருக்கிறார்கள். எங்கு கொலை நடந்தாலும் அதற்கு பாமக தான் காரணமா அப்படி என்று பாமக தரப்பில் மீம்ஸ் போடுகிறார்கள்.
சத்யா என்பவர் நேரடியாக கொலையில் சம்பந்தப்பட்ட இருக்கிறான், இவன் பழனி என்பவருடைய மகன்.அந்த மூன்று நான்கு பேரை தவிர மற்ற அத்தனை பேரும் பாமகவை சார்ந்தவர். அவர்கள் கொடியை கட்டிக் கொண்டு, வாக்கு சேகரித்தவர்கள் இதை யாரும் மறுக்க முடியாது என திருமாவளவன் தெரிவித்தார்.