Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் இல்லை…! முடிவு எடுப்பது நாங்கள் தான் – நடுங்க வைத்த பாஜக …!!

அரியலூர் மாவட்டத்திற்கு இன்று பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் எல். முருகன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது மாநில தலைவர் எல்.முருகனிடம் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி ? முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விக்கு அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதனால் நான் அவரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன். ஆனால் எங்களுடைய கட்சி தலைமையில் இருந்து எந்த வேட்பாளரை முதல்வராக அறிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை  தொடர்ந்தே முதல்வர் வேட்பாளரை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.

தற்போது நாங்கள் அதிமுக கூட்டணியில் தொடர்கின்றோம். எங்களுடைய தேசிய தலைமை  அறிவிக்கும் வேட்பாளரை தான் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |