அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக் குழு கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக அருகில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மச்சி ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை கைது செய்தனர்.
இதற்கிடையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த 11-ம் தேதி நடந்த கலவரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு ராயப்பேட்டை காவல் நிலைய போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதாவது நாளை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், நாளை மறுநாள் ஈபிஎஸ் ஆதரவாளர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வீடியோ ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஜம்முனு அனுப்பப்பட்டுள்ளது.