Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும்… எடப்பாடி பழனிசாமி!!

அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்..

இந்த நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், “2024ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது.. நகை கடன் தள்ளுபடி வாக்குறுதியை நம்பி ஏராளமானோர் நகையை அடமானம் வைத்துள்ளனர்.. நகைக்கடன் தள்ளுபடிக்கான வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவாக இல்லை.. திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்றார்.

மேலும் 9 மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளோம்..  ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட்டு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.. நாளை முதல் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |