அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி ஆகியோர் பதில் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுகவின் பொதுச் செயலாளர் நான்தான் என சசிகலா ஒரு பக்கம் கூற, மற்றொரு பக்கம் அதிமுக கட்சி எங்களுடையது என்று எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் கூறிவருகின்றனர். சசிகலாவை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று எடப்பாடி தரப்பில் நிலைப்பாடாக உள்ள நிலையில், அதிமுகவின் அவைத் தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. தங்களின் ஆதரவாளர்களை அவைத்தலைவராக கொண்டு வரவேண்டுமென்று ஓபிஎஸ் இபிஎஸ் இருவருமே திட்டம் போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கில் ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சாணார்பட்டி அருகே உள்ள அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு சசிகலா சிறை சென்றதால் பொதுக்குழுவை கூட்டி பொது செயலாளர் பதவியை நீக்கிவிட்டு சட்டத்திற்கு முரணாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை உருவாக்கி உள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தற்போது கட்சி அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த பிறகு இந்த பதிவிக்கு வேறு நபர் தேர்வு செய்ய ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதாக அவர் அதில் தெரிவித்திருந்தார். எனவே விதிமுறைகளுக்கு முரணாக அதிமுக கட்சியின் அவைத் தலைவர் நியமனம் செய்யவும், தேர்வு செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தாமோதரன் இந்த மனு தொடர்பாக ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கூறி விசாரணையை வரும் 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.