தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை டவுன் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியை அவல ஆட்சி என கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியது பின்வருமாறு, “எனக்குப் பின்னால் 100 ஆண்டுகளுக்கு கழகம் தான் ஆட்சி செய்யும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார்கள். 10 ஆண்டுகால அவல ஆட்சிக்கு பின் நல்லாட்சியை தொடர உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு ஒரு நல் வாய்ப்பாக அமையும் ஆதலால் மக்கள் அதிமுகவால் கொண்டுவரப்படவுள்ள பல நல்ல திட்டங்களை மனதில் வைத்து மக்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார்.
தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு தொடர்ந்து 10 ஆண்டுகள் அதாவது 2011-2021 ஆண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தது ஜெயலலிதாதான். அவ்வாறு இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆட்சியை அவல ஆட்சியில் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாய் தவறி எதுவும் பேசி விட்டாரா? அல்லது எடப்பாடி மீது உள்ள பகை காரணமாக இவ்வாறு பேசி விட்டாரா? என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவர் பத்து ஆண்டுகளாக அவல ஆட்சி என கூறியது அதிமுகவை தான். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.