செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், அம்மாவுடைய வழிகாட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்ற தமிழக முதலமைச்சர் அவர்கள், பல்வேறு திட்டங்களை இந்தியாவே வியக்கத்தக்க அளவிற்கு, பாராட்டுகளை பெறுகின்ற அளவுக்கு, சாதனை சரித்திரம் படைத்து வருகிறார்கள். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர்களும் ஒருங்கிணைந்து இந்த இயக்கத்தை வழி நடத்திச் சென்று கொண்டு இருக்கிறார்கள்.
அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கின்ற தேர்தல் அறிக்கை இதுவரையிலும் இந்திய நாட்டின் வரலாற்றில் யாருமே செய்துவிட முடியாத அளவுக்கு, அனைத்தும் மதத்தைச் சார்ந்தவர்கள், அனைத்து வகைப்பட்ட தொழில் செய்கின்றவர்கள் , ஏழை எளிய மக்கள் அனைவரும் வியக்கத்தக்க அளவுக்கு பாராட்டுகளை பெருகின்ற அளவுக்கு அமைந்திருக்கிறது.
குறிப்பாக அனைத்து மக்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கின்ற அளவுக்கு ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டதன் அடிப்படையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தேர்தல் களத்தில் மட்டுமல்ல, தேர்தலுக்கு முன்னால் கூட விவசாயிகள் கடன், நகை கடன், அதேபோல சுயநிதி குழுவைச் சார்ந்தவர்களுக்கு இருக்கின்ற கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டுமல்ல உலக பெண்கள் தினம் அன்று 1,500 ரூபாயும், ஒரு குடும்பத் தலைவிக்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்தும் ஒருங்கிணைத்து இந்திய நாடே வியக்கத்தக்க அளவில், சாதனை சரித்திரத்தை படைக்கின்ற அளவிற்கு தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது.