அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கொடியை கட்டி சசிகலா காரில் செல்வதை ஏற்க முடியாது; எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்று தெரிவித்தார். மேலும் கட்சி மீது எந்த உரிமையும் அவருக்கு இல்லை. முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும்.’ என்றும் அவர் பேசினார்.