தமிழக சட்டமன்ற தேர்தல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சசிகலாவின் வருகை அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் எப்படியாவது அமமுக மற்றும் அதிமுக கட்சி ஒன்றினையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சசிகலா திடீரென்று தான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டது. மேலும் சசிகலாவின் இந்த முடிவின் காரணமாக டிடிவி தினகரன் இரவு முழுவதும் தூங்காமல் வேதனைக்கு ஆளானார்.
வேதனை இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார் டிடிவி. தன்னுடைய தலைமையில்தான் அமமுக கூட்டணி அமையும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர் சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ஒரு தொகுதிக்கு 15 பேர் என மூன்று தொகுதிகளில் மொத்தம் 45 சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
இதனால் இவர்களில் சரியான நபரைத் தேர்ந்தெடுத்து அந்த தொகுதியில் களம் இறக்க உள்ளதாகவும், அதிமுகவினரும் டப் கொடுக்க டிடிவி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவின் கோட்டையான சேலம் மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு சரிய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.