அதிமுக சட்டவிதிகளில் எந்த ஒரு தொண்டரும் திருத்தம் செய்ய விரும்பவில்லை என்று சசிகலா பேட்டி அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மன்னார்சாமி கோயில் அருகே அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை மூன்றாவது பெரிய கட்சியாக மாற்றியவர் ஜெயலலிதா. பசுதோல் போர்த்திய புலிகளின் கையில் அதிமுக சிக்கி சின்னா பின்னமாகி வருகிறது. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலை இல்லாமல் போட்டியிட யார் அதிகாரம் கொடுத்தது.
தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நிலைக்கு தொண்டர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை அவரவர் விருப்பத்திற்கு கட்சியின் சட்ட விதிகளை மாற்றுவதற்கு உரிமை இல்லை, யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை . எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவின் சட்ட திருத்தங்களில் திருத்தம் செய்வதற்கு எந்த தொண்டரும் விரும்பவில்லை” என்று அவர் தெரிவித்தார்.