அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி இருந்தார்.
இதற்கு முன் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் அதிமுகவின் வங்கி வரவு செலவுகளை பராமரிப்பது, காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை வைத்திருந்தார்.இனி அந்த அதிகாரம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு மாற்றப்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.