Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து தோப்பு வெங்கடாச்சலம் நீக்கம்… ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி உத்தரவு…!!!

பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலத்தின் அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.

அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களை நியமித்து வருகிறது. ஆனால் அதில் முக்கிய எம்எல்ஏக்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் அவர்கள் அனைவரும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில் பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்தை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ் ஈபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர்.பெருந்துறையில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து போட்டியிட வெங்கடாசலம் சுயேட்சையாக மனு தாக்கல் செய்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்கடாசலம் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |