பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்..
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுள்ளார் என நேற்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் அவரிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இந்த நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.