அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,
கவலைப்படாதீங்க திமுகவுக்கு இன்னும் நான்கு வருடம் இருக்கின்றது.
ஆனால் நான்கு வருடம் நீடிக்குமா என்று தெரியாது. முழு 4 வருடம் ஆகி விட்டால் அதற்கு பிறகு நிச்சயமாக திமுக தமிழ்நாட்டில் ஆட்சி கிடையவே கிடையாது.
எல்லாமே ஒட்டுமொத்தமாக பாரதிய ஜனதா கட்சி தான் தமிழ்நாட்டில் ஆளக் கூடிய கட்சியாக நிச்சயமாக வரும். உறுதியாக ஏன் சொல்கிறேன் என்றால், அண்ணா திமுக இன்றைக்கு கூட்டணியில் இருக்கு. இன்னைக்கு கூட்டணியில் இருக்கு இல்லை என்கிறது இரண்டாவது விஷயம். சட்டமன்றத்தில் தைரியமாக ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அண்ணா திமுகவை நான் பார்க்க முடியவில்லை.
நீங்களாவது பேசலாமே என கேட்கலாம். நாலுபேர் அவங்க ஒன்னும் பேச முடியாது. அப்படி பேசினால் வெளியே புடிச்சு போட்டுருவாங்க. வெளியே வீசி விடுவார்கள். நான்கு பேரில் இரண்டு பேர் பெண்கள், அண்ணன் எம்ஆர் காந்திய பார்த்தீர்கள் என்றால் அவருக்கு எழுபது வயது ஆச்சு… நான் அவுங்க தோளுக்கு மேல ஏறி உட்கார லாமே தவிர வேற ஒன்னும் சொல்ல முடியாது. பேசினா மைக்கை கட் பண்ணிடுவாங்க.
எனவே தமிழகத்தில் அண்ணா திமுக எதிர்கட்சி இல்லை. சட்டமன்றத்தில் பேசாமல் இருந்தாலும் இன்னைக்கு பாரதிய ஜனதா கட்சி எதிர்க் கட்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கிற மிகப்பெரிய தலைவராக நம்முடைய தலைவர் அண்ணாமலை இருந்து கொண்டிருக்கின்றார். அதில் யாருக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது, தைரியமாக எல்லாம் பேச வேண்டும், ஊடகங்கள் பாவம் அவர்கள் எல்லாம் அம்பு தான் என தெரிவித்தார்.