சற்று முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பு வருகிற 7-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முதல்வர் வேட்பாளருக்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் சற்று முன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி, செங்கோட்டையன், ராஜேந்திரபாலாஜி மற்றும் வெல்லமண்டி நடராஜன் முதலானோர் பங்கேற்றுள்ளனர். இதனை அடுத்து இந்த ஆலோசனையின் நோக்கம் என்ன ? அதிமுகவில் நடைபெறவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையிலும்,பொதுமக்களிடையிலும் நிலவியுள்ளது.