அஇஅதிமுகவிற்கு கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகளை நியமித்து தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுகவில் 29 புதிய கட்சி மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு நிர்வாகிகள் நியமனம் விவசாயப்பிரிவு, மருத்துவ அணி ஆகிய பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்தும் தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா அமைப்புச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் அதிமுகவின் இத்தகைய மாற்றம் நடைபெற்று உள்ளது.