டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமடைந்த ரவுடி பேபி சூர்யா, மற்றொரு பிரபலமான ஜி.பி.முத்து இவரை “கவர்ச்சி கன்னி” என்று அன்போடு அழைப்பார். அரைகுறை உடைகளோடு நடனமாடி பிரபலமடைந்த சூர்யா, தற்போது அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.