Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் ? சற்று நேரத்தில் வெளியாக போகும் பரபரப்பு அறிவிப்பு …!!

அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10மணிக்கு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதில் வர இருக்கும் பொதுக்குழு, அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு என ஏராளமான அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது. நேற்றைய தினம் ஓபிஎஸ் மதுரை, தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் பயணமாக சென்றார். இதனுடைய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள்  தெரிகின்றன.

குறிப்பாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை குறித்து இன்றைய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தற்போதைய சூழலில் ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய ஓ பன்னீர்செல்வம் குறித்து இன்றைய தினம்  வாதிக்க இருக்கிறார்கள் என்றும்,  அந்தக் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரபூர்வமான தகவல் எனவும் சொல்லப்படுகின்றது.

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருக்கக்கூடிய அவருடைய ஆதரவாளர்களும், முக்கிய நிர்வாகிகள் பேசும்போது ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அவர் முன்னாள் ஒருங்கிணைப்பாளராக ஆகிவிட்டார் என்று சிவி சண்முகம் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில்தான் தற்போது இன்று கூட்டப்பட்டு இருக்கக்கூடிய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கூட தலைமை கழக செயலாளர் என்ற தலைப்பில் இருந்து தான் அதிமுக அலுவலகத்தில் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

எனவே இனி ஓ பன்னீர்செல்வம் நடவடிக்கை குறித்தும்,  கட்சியினுடைய பயன்பாடு குறித்தும், கட்சிக்கும் அவருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது சொல்வதற்கான ஒரு வாய்ப்பு இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்படுகிறது. கட்சியினுடைய பெயரை அவர் பயன்படுத்தலாமா ? அல்லது அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே நிர்வாகிகள் கூட்டம் முக்கியமாக பார்க்கப்படுகிறது அனைத்து தலைமை கழக நிர்வாகிகளும் என  கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்  இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள்.  இதில் விவாதிக்கப்படும்ம் அம்சம்தான் ஓபிஎஸ்  அணி நிர்வாகிகள் மீது என்ன நடவடிக்கை  எடுக்கிறார்கள் ? என்பதற்கான தீர்மானமாக அறிக்கையாக வெளியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது

Categories

Tech |