தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுக பிரமுகர் திமுகவில் இணைந்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் திரு அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் அதிமுக மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் சேர்மனுமான சுரேஷ்குமார் அவர்கள் திமுகவில் இணைந்துள்ளார்.
அப்போது திமுக மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அவை தலைவர் அருணாச்சலம் மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்துள்ளார்.