அதிமுகவில் கடந்த சில நாட்களாக வட்ட தலைமை தொடர்பான சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா என்ற தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளார். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரை சந்திப்பதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்ட அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஜிஆரின் பெருமைகளையும் ஜெயலலிதாவின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மகத்தான சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.
அதன்படி ஜூன் 26ம் தேதி பிற்பகல் 12.30மணிக்கு சென்னை தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் சாலை வழியாக திருத்தணி பைபாஸ் செல்கிறேன். அதன்பிறகு அங்கிருந்து பயணத்தை தொடங்கிய திருத்தணி மற்றும் குண்டலூர் பகுதிகளில் தொண்டர்கள் பொதுமக்களை சந்திக்கிறேன். அங்குள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் திடீர் அரசியல் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.