அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அதிமுக கிளை கழக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர், ஒன்றிய கழகம், பேரூர் நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படும். மேலும் தேர்தல் பற்றிய அறிவிப்பு இந்த மாதம் 10 ஆம் தேதிக்கு பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.