அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாவார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் சிறையில் இருந்து விடுதலையாகும் பட்சத்தில் தமிழக அரசில் பல்வேறு மாற்றம் ஏற்படும் என்றும், அவர் மீண்டும் கட்சியில் இடம் பெறுவார் என்றும், ஆட்சியை வழி நடத்துவார் என்றும் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த வகையில் இது குறித்த கேள்வி இன்று அமைச்சர் ஓ.எஸ் மணியனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது ? என கட்சி தலைமை தான் முடிவு செய்யும்ல். நான் ஒரு மாவட்ட செயலாளர் அவ்வளவு தான் என கூறியிருந்த நிலையில், தற்போது அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் சசிகலாவுக்கு இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் ஓ.எஸ் மணியனின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.