எதிர்க்கட்சி தலைவராக யார் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பதில் தொடர்ந்து அதிமுகவில் போட்டி நிலவி வருகின்றது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு அதிமுக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டுமென புகழேந்தி தெரிவித்துள்ள கருத்து அந்த கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக ஈபிஎஸ் தேர்ந்தெடுக்க வேண்டுமென மற்றொரு தரப்பு கூறியுள்ளது. இது கட்சிக்குள்ளே சர்ச்சை மேலும் அதிகரித்துள்ளது.