சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7 ஆம் தேதி நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதிமுக தலமை அலுவலகத்திற்கு நேரில் சென்ற சிபிசிஐடி டிஎஸ்பிக்கள் ராஜா பூபதி, வெங்கடேசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணையை எம்பி சி.வி.சண்முகம் நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மீண்டும் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.