Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் நீக்கப்பட்ட நிர்வாகிகள்….. மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம்…. ஓபிஎஸ் பரபரப்பு….!!!!

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11ஆம் தேதி நடந்த பொது குழுவில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பொருளாளராக இருந்த ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில், அதிமுகவில் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவில் நிலவும் பரபரப்பான சூழலில் ஓபிஎஸ் இவ்வாறு அறிவித்துள்ளது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் எனவும் காலியாக உள்ள அனைத்து பொறுப்புகளும் விரைந்து நிரப்பப்படும் எனவும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

Categories

Tech |