சசிகலாவை மறுபடியும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆதரவும், எதிர்ப்பும் அக்கட்சியின் இடையே வலுத்து வருகிறது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எப்படியாவது அதிமுகவில் சேர்த்துவிட வேண்டும் என்று துடித்து வருகின்றனர். இன்னொருபக்கம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்ட அதிமுக-வினர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தி சசிகலாவை மீண்டும் அக்கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா சசிகலாவை நேரில் சந்தித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிரடியாகப் புகுந்து விடுங்கள் என்று சசிகலாவுக்கு சாவி கொடுத்துவிட்டு வந்துள்ளார். பன்னீர்செல்வம் தரப்பினர் இவ்வாறு மும்முரமாக களமிறங்கி கொண்டிருக்க, எடப்பாடி தரப்பு இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. இதனிடையில் அப்போது 60 எம்எல்ஏ-க்கள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இந்த 60 எம்.எல்.ஏக்களும் சசிகலாவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்துள்ளனர். அதே சமயம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு என்று பார்த்தால் வெறும் 4 எம்எல்ஏ-க்கள் மட்டுமே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது தொடர்பாக நடக்கப்போவது என்ன?… என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.