Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் வெடித்தது பூகம்பம்…. பரபரப்பு போஸ்டர்…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து முதன்முதலில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கூட ஓபிஎஸ் பங்கேற்காமல் புறக்கணித்தார். இந்நிலையில் நெல்லையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும், ஈபிஎஸ்க்கு எதிராகவும் அதிமுக தொண்டர்கள் பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ப ஓபிஎஸ் இடம் ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையும் செய்ய வேண்டாம். ஆலோசிக்காமல் செய்ததால்தான் தேர்தலில் அதிமுக தோற்றதாக அந்த போஸ்டரில் வாசகம் இடம்பெற்றுள்ளதாம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |