Categories
அரசியல்

அதிமுகவுக்கு அடுத்தடுத்த ஷாக்…!!கவுன்சிலர்கள் வைத்த ஆப்பு…!!

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிகள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 8 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும், 4 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுக , மற்றும் திமுக கூட்டணி கட்சி இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் திட்டச்சேரி பேரூராட்சியில் 14வது வார்டு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கலியபெருமாள் பதவியேற்பு முடிந்தவுடன் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு சென்று தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் திமுகவில் இணைந்தார். நாளை மறுநாள் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கவுன்சிலர் கட்சி மாறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |