Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு தோல்வி பயம்…. 10கோடி, 20கோடிக்கு வாங்கிட்டாங்க.. டிடிவி தினகரன் வேதனை..!

தமிழகம் முழுவதும் நேற்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பெரிய அளவில் மாற்றம் வரும், அரசியல் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். பெரிய அளவில் மாற்றத்தை மக்கள் உருவாக்குவார்கள். மே 2ஆம் தேதி தெரிந்து விடும். அமமுக வெற்றி தமிழகம் முழுவதும் சிறப்பாக இருக்கு. தமிழ்நாட்டு மக்கள் எங்களுக்கு ஆதரவாக இந்த தேர்தலில் ஆதரித்து, பெரிய மாற்றம் நடக்கப் போகிறது.

தீயசக்திகளையும், துரோக சக்திகளையும் ஆட்சிக்கு வரவிடாமல்  தடுக்கும் சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாய்ப்பு அளிப்பார்கள்.தேர்தல் ரிசல்ட் வரட்டும், அதற்க்கு பிறகு  இயற்கை எல்லாத்தையும் உணர்த்தும். அதிமுக தோல்வி பயத்தில் இருக்கின்றது. மக்கள் வந்து வீட்டுக்கு அனுப்ப முடிவு பண்ணிட்டாங்க என்று தெரிந்ததும், பதற்றத்தில்  ஆளுங்கட்சி வேலைகளை செய்கிறது, அதுதான் உண்மை.

பெரிய அளவில் விலை பேசப்பட்டதால் வேட்பாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். அமைச்சர்கள் தொகுதியில் அமமுகதினரை வேலை செய்யவிடாமல் முயற்சி செய்தார்கள். அதையெல்லாம் முறியடித்து வேலை செய்தார்கள். ஒரு சில இடங்களில் வேட்பாளர்கள் பயத்தின் காரணமாக 10கோடி, 20கோடிக்கு விலை பேசி வாங்கப்பட்டது உண்மை என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Categories

Tech |