தமிழகத்தில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டை என கருதப்பட்ட சேலம் மாநகராட்சி தற்போது திமுகவிடம் சென்றுள்ளது. 7 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.