Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுடன் கூட்டணி முறிவு… பாஜக தனித்து போட்டி…. தமிழக அரசியலில் திடீர் டுவிஸ்ட் …!!

பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஒரு கஷ்டமான ஒரு விஷயம் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி உடன்படிக்கை.

இதற்கு முன்பு தொடர்ச்சியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பாக அதனுடைய தலைவர்கள் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக தொடர்ந்து நம்முடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து, விவசாய சட்டத்திலிருந்து நம் நாட்டிலேயே நம்முடைய பாரத பிரதமரின் எடுத்த முக்கியமான முடிவு அனைத்திற்கும் கூட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர்கள், அதனுடைய தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார்கள். 2021 தேர்தலில் இபிஎஸ் அவர்கள் மறுபடியும் கூட முதலமைச்சராக வருவதற்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுத்து நாங்கள் கூட உழைத்தோம்.

அதன் பின்பு நடந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி உடன்படிக்கையை ஏற்பட்டாலும் கூட  நடைமுறைப்படுத்துவதற்கு மிகப்பெரிய சிரமமாகி விட்டது. இப்போது நடக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுகவின் முக்கியமான தலைவர்களிடம் பேசினோம். குறிப்பாக நம்முடைய ஓபிஎஸ் – இபிஎஸ்ஸிடம் பேசிக் கொண்டு வந்தோம்.

பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை ஒரு வேகமாக வளர்ந்து வரக்கூடிய ஒரு கட்சி.  தலைவர்கள், தொண்டர்கள் என அனைவரும் கூட உள்ளாட்சித் தேர்தலில் மையமாக வைத்து வேலை செய்யக்கூடிய கட்சி. நிறைய இடத்தில் நிற்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எங்களால் எங்களுடைய தொண்டர்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்பது மாநில தலைமையின்  முக்கியம் முடிவு.

உள்ளாட்சியில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் நம்முடைய தொண்டர்கள் இருக்க வேண்டும், தலைவர்கள் இருக்க வேண்டும்,கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. அதே நேரத்தில் ஒரு பெரிய கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று அறிவித்தார்.

Categories

Tech |