Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை கைப்பற்றுவாரா ஓபிஎஸ்….. புதிதாக போட்ட பக்கா பிளான்…. அதிர்ச்சியில் எடப்பாடி….!!!!

அதிமுக கட்சியில் சமீப காலமாகவே உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமைக்காக கடுமையாக மோதிக் கொள்கின்றனர். கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதேபோன்று ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் ஓபிஎஸ்-க்கு சாதகமாக முதலில் தீர்ப்பு வந்தாலு,ம் இபிஎஸ் செய்த மேல்முறையீட்டில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்துள்ளது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதற்காக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் டெல்லியில் முகாமிட்டு வழக்கறிஞர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது.

அதோடு சட்ட விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியதாகவும், சட்ட விவகாரங்களை மனோஜ் பாண்டியன் கவனித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று கட்சி ரீதியான செயல்பாடுகளை வைத்திலிங்கம் கவனித்துக் கொள்கிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ள நிலையில், ஓபிஎஸ் தன்னுடைய ஒருங்கிணைப்பாளர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யாமல் தான் இருக்கிறார்.

ஆனால் இபிஎஸ் தரப்பு ஒருங்கிணைப்பாளர் பதவி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டது என்று கூறுகின்றனர். இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியது போன்று, ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமி கேட்டது போல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான ராஜினாமாவை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். இதில் தேர்தல் ஆணையம் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவான உத்தரவை பிறப்பித்தால், பன்னீர்செல்வம் முன்பே அறிவித்தது போன்று இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் பொறுப்பேற்பார்.

இது எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகப்பெரிய சிக்கல். மேலும் சென்னையில் கூடிய விரைவில் ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் கூட்டம் நடத்தி தங்களுடைய செல்வாக்கை காட்ட முடிவு செய்துள்ளதாகவும் தெரிந்த வட்டாரங்கள் கூறுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக கூறி தேர்தல் ஆணையத்திற்கு இமெயில் அனுப்பி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓ. பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக தான் வரும் என அவரின் ஆதரவாளர்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |