அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நள்ளிரவு வரை நடைபெற்ற ஆலோசனையில் அதிமுகவை கைபற்ற புதிய வியூகம் வகுத்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற ஜூன் 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுவதை ஒட்டி மூன்று நாட்களாக நடைபெற்ற தீர்மான குழு கூட்டத்தில் 18 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே மாவட்ட செயலாளர்கள் முதல் வழிகாட்டுதல் குழு நிர்வாகிகள் வரை அனைவரும் இபிஎஸ் தரப்புக்கு அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதால் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெறும் போது ஒற்றை திறமைக்காக தனித் தீர்மானம் கொண்டுவர ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவ்வாறு தீர்மானம் கொண்டுவந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஓபிஎஸ் தரப்பு ஆலோசனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.