Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை சும்மா வீட்டீங்களா ? எப்படில்லாம் செஞ்சீங்க ? திமுகவையும் வச்சு செய்யுங்க ? எடப்பாடி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிசாமி,  பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று எல்லா ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் முழுமையாக போடவில்லை. சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு தமிழகத்திலேயே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. இவர்களுக்கு முறையாபொங்கல் தொகுப்பு வழங்கினார்களா ? என்றால் கிடையாது.

அதில் 21 பொருள்கள் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை கொடுத்தார்களா இல்லை. 16 பொருள்,  18 பொருள் தான் இருந்தது. நீங்க எல்லா பகுதியிலும் சென்று கேட்டு பாருங்கள். நாங்கள் சொன்னால் கூட தவறு என்று கூறுவீர்கள். நீங்க மக்கள்கிட்ட போய் பேட்டி எடுங்க. ஏன் பேட்டி எடுக்க மாட்டேங்கிறீர்கள். அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும் போது எப்படி எல்லாம் போய் பேட்டி எடுத்து போட்டீங்க.

இப்போ எந்த ஊடகங்கமாவது  போய் பேட்டி எடுத்து போடுறீங்களா? அப்படி எதுவுமே கிடையாது. ஆனால் மக்களுக்கு முழுவதும் தெரியும். ஏனா மக்கள் அந்த பொருளை வாங்குகிறார்கள். பொருள் வாங்கியதும் அதனுடைய தரத்தை பார்க்கிறார்கள். பொருளில் என்ன முறைகேடு நடந்திருக்கிறது என்று பார்க்கிறார்கள். பொருள் எது குறைந்திருக்கிறது என்று பார்க்கிறார்கள். இதை யாராலும் மறைக்க முடியாது. ஊடகமும்,  பத்திரிக்கையும் மறைக்கவே முடியாது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என விமர்சித்தார்.

Categories

Tech |