Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பார்த்து தான்…. திமுக காப்பி அடிக்குது…. ஆதாரமாக போட்டோவை போட்டு – எஸ்.பி வேலுமணி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தி விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

உயர்கல்வி, உயர்ந்த மருத்துவ படிப்பு, ஊரக கட்டமைப்பு தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் உரிமைதொகை வழங்கப்படும், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்தார். நிலையில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாகவும், பாஜக அரசு  திட்டங்களை புதியது போன்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிக்கிறார் என்றும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முழுவதுமாக ஒழிப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே அதற்கான நவீன திட்டத்தை இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு செயல்படுத்தி வந்துள்ளது. ஆனால் தங்களுடைய ஆட்சிக்காலத்தில் செய்த தவறுகளால் மக்கள் செல்வாக்கை முழுவதுமாக இழந்த திமுகவினர் அதிமுக ஆட்சியில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தாம் ஆட்சிக்கு வந்ததும் செய்வேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வருகின்றனர் என்று அமைச்சர் எஸ் பி வேலுமணி விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |