சேலம் மாவட்டத்தில் கட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை ஒட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். இவருக்கு சேல புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச் செயலாளராக பதவி ஏற்ற முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமி க்ரைன் மூலம் ராட்ச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பேரறிஞர் அண்ணாவுக்கு பிறந்தநாள் விழா நடத்த தகுதியான இயக்கம் அதிமுக மட்டும் தான். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. அவரை எதில் எல்லாம் அக்கறை செலுத்தினாரோ அந்த வழியில் எம்ஜிஆர் சத்துணவு திட்டம் கொண்டு வந்து சிறப்பாக நடத்தினார். எம்ஜிஆர் செய்த சாதனைகள், நன்மைகளை ஜெயலலிதா நிறைவேற்றினார்.
அதனை தொடர்ந்து நம்முடைய தலைவர்கள் மக்களுக்காக உழைத்தவர்கள் உயிரோட்டம் உள்ள திட்டங்களில் மூலம் மறைவிற்குப் பின்னரும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோது, அதிகமான போராட்டங்களை சந்தித்தேன். யார் போராட்டம் நடத்தினாலும் அனுமதி வழங்கினேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. தற்போது அதிமுக நடத்திய போராட்டத்திற்கு திமுக ஆட்சி பயந்துவிட்டது. மின்கட்டணம் உயர்வு போராட்டத்தில் அனுமதி கொடுக்காமல் ஸ்டாலின் நடுங்கி கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்று முழு பூசணிக்காவை சோற்றில் மறைக்க பார்க்கிறார் ஸ்டாலின். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த அனைத்து வாக்குறுதிகளிலும் ஜெயலலிதா முழுமையாக நிறைவேற்றினார். மேலும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினி திட்டத்தை திமுக ஆட்சி நிறுத்திவிட்டது என்று அவர் குற்றம் சாட்டி பேசினார்.