சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அவர் இன்று வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது.
அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு ஊசிகள் பிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது. தடுப்பூசிகள் எதுவும் பின் அடைக்கப்படவில்லை. அப்போது பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை எனவும் அவர் கூறினார். உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.