Categories
அரசியல்

அதிமுகவை ராமதாஸ் விமர்சிக்கவில்லை…. பாமக வழக்கறிஞர் பாலு…!!!

அதிமுகவுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்வதாக அகாட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அதிமுகவினரோடு முரண்பாடு ஏற்பட்டது போன்று ஒரு தோற்றம் உருவாகியிருக்கிறது. அது உண்மையில்லை. எங்களுக்கும், அவர்களுக்கும் எந்தவித முரண்பாடும் கிடையாது.

அவர்களோடு நட்புடன் தான் இருந்து கொண்டிருக்கிறோம். அண்ணா திமுக அரசின் மீது எந்த விதமான விமர்சனங்களும் நேற்றையதினம் தெரிவிக்கவில்லை. தேர்தலைப் பொறுத்தவரையில் போதிய கால அவகாசம் இல்லை என்பதாலும் பெரும்பான்மையானவர்கள் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இந்த முடிவை பாமக முடிவு எடுத்திருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இடம்பெற்றிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை தொடரும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |