பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு அதிமுகவை பற்றி விமர்சிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சிகளில் இருந்து பிரிந்து சென்ற பாஜகவில் முக்கிய பிரபலங்கள் அனைவரும் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த இயக்குனர் பேரரசு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” அரசியல் தலைவர்கள் நல்ல திட்டங்களை தான் வாக்குறுதி அளிக்க வேண்டும். அந்தக் கடன் ரத்து, இந்தக் கடன் ரத்து, அது இலவசம், இது இலவசம் என்று மக்களை ஏமாற்றும் வாக்குறுதியை அளிக்க கூடாது. அதையெல்லாம் மக்கள் வரிப்பணம். இது அவர்களின் சொந்தப் பணமல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார். இது கூட்டணிக் கட்சியான அதிமுகவை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.