செய்தியாளர்களிடம் பேசிய கே.பி முனுசாமி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இந்த மாபெரும் இயக்கம் மறைந்த இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள், மறைந்த முன்னாள் முதலமைச்சர் திரு கருணாநிதி அவர்கள் செய்த தவற்றின் காரணமாக தனக்கென்று ஒரு கொள்கையை அவர் உருவாக்கிக்கொண்டு தான், தனது குடும்பம், தன் ஆதரவாளர்கள் என்று அந்த இயக்கத்தை கைப்பற்றிய போது உண்மையான அண்ணாவினுடைய சிந்தனைகளை,
கொள்கைகளை உண்மையான அண்ணாவுடைய தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அண்ணாவினுடைய திருநாமத்தை முன்னால் வைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை உருவாக்கினார்கள்.அப்படி அந்த இயக்கம் உருவாக்குகின்றபோது சாதி பற்றி வரவில்லை, மதத்தை பற்றி வரவில்லை, வேண்டியோர் பற்றி வரவில்லை, வேண்டாதவர் பற்றி வரவில்லை.
அது வந்தது முழுவதுமே அண்ணாவை பற்றி அந்த இயக்கம் வந்தது. அண்ணாவினுடைய தொண்டர்களை காப்பற்றுவதற்கும், அண்ணாவுடைய கொள்கைகளை முன்னெடுத்து செல்வதற்குமாக தான் புரட்ச்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த தியாக வேள்வியிலே தன்னை இணைத்துக்கொண்டார்கள்.
அப்படி இணைத்துக்கொண்ட அந்த மாபெரும் இயக்கம் ஒரு குறிப்பிட்ட சாதிக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் செல்வது என்று சொன்னால் உண்மையாகவே தந்தை பெரியார் இறந்துவிடுகிறார், பேரறிஞர் அண்ணா இறந்துவிடுகிறார், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் இறந்து விடுகிறார், புரட்சி தலைவி அம்மா இறந்து விடுகிறார், சாதாரண தொண்டானகிய கே.பி.முனுசாமி இறந்து விடுகிறேன். இதற்கு மேல் பதில் சொல்ல நான் விரும்பவும் இல்லை என கே.பி முனிசாமி தெரிவித்தார்.