Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக- அமமுக… அண்ணன் தம்பி பிரச்சனை… அமைச்சர்கள் கருத்து மோதல்…!!!

நம்முடன் உள்ள பிரச்சனையை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை தீவிரமாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கோகுல இந்திரா கருத்து தெரிவித்தனர்.

இதனையடுத்து அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் இருக்கும் பிரச்சனை அண்ணன் தம்பி பிரச்சினை, அவற்றை உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கும் கருத்துக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவரும், இரட்டை இலைச் சின்னத்தை முடக்க நினைத்த கட்சியும் ஒருநாளும் அதிமுகவுடன் சேர முடியாது என அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |