தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும், எல்லா வகைகளிலும் அதல பாதாளத்திற்கு போய்விட்டது. அதிமுக ஆட்சியின் சாதனைகளை சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தினுடைய கடன்சுமை 5 லட்சம் கோடி, எல்லா துறைகளிலும் பல ஆயிரம் கோடி கொள்ளை, தமிழக உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்து இருப்பது, பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியது, வேலைவாய்ப்பை உருவாக்காமல் பல லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி வைத்திருப்பது,
விஷம் போல விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீரழிவு, விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டிருப்பது. சமூக நீதியை ஒரு கொலை செய்து நம்பி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வதுதான் பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு. இந்த ஆட்சியில் எல்லா தரப்பு மக்களும் நிம்மதியாக இல்லை. ஏற்கனவே இருந்த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதைவிட இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இருந்த நிம்மதியும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்கள் விவசாயிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை, தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபரை வரை கிராமப்புற மக்கள் முதல் நகர்ப்புற மக்கள் வரை, குழந்தைகள் முதல் முதியவர் வரை எல்லோருடைய நிம்மதியும் போய்விட்டது. எந்த தொகுதியிலும் புதிய திட்டங்கள் கிடையாது. முதலமைச்சர் தொகுதியாக இருந்தாலும் சரி, துணை முதலமைச்சர் தொகுதி, அமைச்சர்கள் தொகுதிகள் என எங்கேயும் எதுவுமே நடக்கல. மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கூட எங்கும் செய்து தர முடியாத சூழலில் இந்த ஆட்சி இருக்கு. கொரோனா காலத்தில் மக்களை இந்த அரசு முழுசா கைவிட்டு கைவிட்டு விட்டது. மக்களுக்கு தேவைப்படும் போது கொடுக்காமல் தேர்தல் வருவதை மனதில் வைத்துக் கொண்டு 2,500 ரூபாய் கொடுத்துவிட்டு இருக்கிறார்கள்.