Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அரசு சூப்பர்…! இம்புட்டு திட்டமா ? இல்லத்தரசிகளை கவர்ந்த EPS… சும்மா கலக்கிட்டீங்க …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசிய போது, இங்கே அதிகமாக நம்முடைய மகளிர் அணியை  சேர்ந்த சகோதரிகள் குழுமி இருக்கிறீர்கள். அம்மாவுடைய அரசு தான் மகளிருக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கின்றது. மகளிர் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மாண்புமிகு  அம்மாவுடைய அரசு 81,000 கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் கொடுத்து சுயஉதவி குழுவை ஏற்றம் பெற வைத்தது புரட்சித்தலைவி அம்மா.

அதே வழியில் செயல்படுகின்ற அம்மாவுடைய அரசும், சுய உதவி குழுவுக்கு முன்னுரிமை கொடுத்து, பெண்களின் நலன் காக்கின்ற அரசாங்க, பெண்களில் முன்னேற்றத்திற்கு பாடுகளும் படுகின்ற அரசாக, பெண்களுடைய சமூக பொருளாதாரம் உயர வேண்டும் என்பதற்காக அம்மாவின் அரசு சுய உதவி குழுவுக்கு முன்னுரிமை கொடுத்து, அதிக அளவிலே வங்கி இணைப்பு கடன் வழங்கப்பட்டு வருகிறது.

அம்மாவுடைய அரசு  பெண்களுக்காக உள்ளாட்சியில் ஐம்பது சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2016 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேர்வு அறிக்கையில் குறிப்பிட்டார்கள். மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்தாலும், அம்மாஅறிவித்த அந்த அறிவிப்புகிணங்க அம்மாவுடைய அரசு உள்ளாட்சியிலே ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு ஒதுக்கியது. வேலை வாய்ப்பிலும் அம்மாவுடைய அரசு பெண்களுக்கு ஒதுக்கப்படுகின்ற இடம் சரியாக கிடைக்க, அவர்களுக்கு உண்டான சலுகைகள் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அம்மா இருக்கும் போது உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கப்படும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார்கள். இந்த மண்ணிலே அம்மா மறைத்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு… அம்மா குறிப்பிட்டவாறு…. உழைக்கும் மகளிர்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அம்மா அரசு தொடர்ந்து கொடுத்து வருகின்றது.

ஒவ்வொரு அம்மா இருசக்கர வாகனம் வாங்குவதற்கும் 25,000ரூபாய் மானியம் கொடுக்கின்ற அரசு அம்மாவோட அரசு. தமிழ் நாடு முழுவதும் மூன்று லட்சம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்துல அம்மா தெரிவித்தார்கள். அம்மா மறைத்தாலும், அம்மாவுடைய அரசு அதை நிறைவேற்றி வருகிறது.  இதுவரை இரண்டு லட்சத்து 84ஆயிரம் மகளிருக்கு ஒவ்வொரு அம்மா இரு சங்கர வாகனம் வாங்குறதுக்கு 25,000ரூபாய் மானியம் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் தாலிக்கு தங்கம்.

இந்தியாவிலேயே தாலிக்கு தங்கம் வழங்கிய ஒரே அரசு அண்ணா திமுக அரசு தான். இதுவரைக்கும் தமிழ்நாடு முழுவதும் 12,51,000 மகளிர்கள் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தில் நிதி உதவி பெற்றுள்ளார்கள். திருமண உதவி சட்டத்துல ஐம்பதாயிரம்… தாலிக்கு தங்கம்…. ஒரு பவுன் வரை கொடுத்தது அம்மாவுடைய அரசு.

ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த பெண்கள் திருமண வயதை அடைகின்ற பொழுது, பொருளாதார சூழல் காரணமாக திருமணம் தடைபடுகின்றது. அந்த நிலையை மாற்றுவதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் சிந்தனையில் உதித்த அந்த திட்டத்தை மாண்புமிகு அம்மா நிறைவேற்றினர்கள். அம்மாவோட அரசு தொடர்ந்து அதை நிறைவேற்றி பெண்களுடைய முன்னேற்றத்துக்கு பாடுறியா அரசு எங்கள் அரசு என்பதை நிரூபித்துக் கட்டிக்கொண்டு இருக்கின்றோம்.

பெண்குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும். பள்ளியில பார்த்தாலும் சரி, கல்லூரிகளில் பார்த்தாலும் சரி பெண் குழந்தைகள் தான் அதிகமாக  மார்க் வாங்குகின்றது. அதிகமா வேலைக்கு போறாங்க. நான் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு துறை துறைவாரியாக வேலை வாய்ப்புல பணிப் பெற்றவர்கள் என்னிடம் சான்றிதழ் வாங்க வருவாங்க. அப்போ நான் பார்க்கும் போது, நூற்றுக்கு அறுபது சதவீதம் பெண்கள் வேலைவாய்ப்பை பெறுகின்றார்கள். ஆண்களை விட பெண்கள் தான் அதிகமா வேலை வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.இதை நான் வேடிக்கை சொல்லல… உண்மையாகவே சொல்லுறேன்.

ஒவ்வொரு முறையும் வேலை பெருகின்ற நபர்களுக்கு சான்றுதல் கொடுப்போம் அப்ப தான் நான் பார்த்தேன்…  தமிழகத்திலே அம்மா அரசு எடுத்த நடவடிக்கை பெண்கள் முன்னேற்றம் எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பது பெருமைபட வைக்கிறது. பெண்கள் நாட்டின் கண்கள். பெண் நினைத்தால் எதையும் சாதிக்கலாம், அந்த சக்தி அவர்களிடத்தில் இருக்கின்றது. ஒரு குடும்பத்திலே குடும்பத்தலைவி எந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றார்களோ அந்த அளவுக்கு அந்த குடும்பம் ஏற்றம் பெறும்.

ஆகவே தான் புரட்சி தலைவி அம்மா அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்தாங்க. ஆகவே இன்று பெண்களுடைய முன்னேற்றம்தான் நாட்டினுடைய முன்னேற்றம். அதற்கெல்லாம் எங்களுடைய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து பெண்களின் வளர்ச்சிக்காகவும், பெண்களுடைய பொருளாதாரம் ஏற்றம் பெற, தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றது என முதல்வர் பேசினார்.

Categories

Tech |