நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திருவெற்றியூர் சட்டமன்ற தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு காரணம், இங்குள்ள பிரச்சனைகள். அனல் மின் நிலையம், அதானியுடைய துறைமுகம், காட்டுப்பள்ளி, பழவேற்காடு, எண்ணூர் இதையெல்லா நாசம் பண்ணுது. இதனால் தமிழ்நாடு தலைநகரம் என்பதை மறந்துட வேண்டியதுதான். மழை வெள்ள் நீர் வடிந்து கடலில் சேரும் முகதுவாரத்தை அடைத்து விட்டார்கள், சுவர் கட்டி எழுப்பி விட்டார்.
கடலில் 2000 ஏக்கர், நிலத்தில் 2000 ஏக்கர், ஆற்றில் 2000 ஏக்கர் என 6111 ஏக்கரை அதானிக்கு எடுத்து கொடுக்கிறார்கள். என்ன இருக்கும் பிறகு… நாங்கள் மறந்துட வேண்டியதுதான் எங்கள் நாட்டை. ஒரு முதலாளியின் லாபத்திற்கு, வாழ்வுக்கு என் தாய் நிலத்தை நான் இழக்க முடியாது. எனக்கு மக்களிடம் ஓட்டை கேட்பதைவிட என் நாட்டைக் காப்பது தான் பெரிது. அதனால்தான் இங்கே நின்று சண்டை செய்ய வந்திருக்கின்றேன். அதிமுக தேர்தல் அறிக்கையை நான் எப்படியும் பாக்கல.
திமுக தேர்தல் அறிக்கையில் தமிழக வேலையில் முன்னுரிமை என்பது குறித்த கேள்விக்கு, இப்ப புதுசா கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கிறேன். வெற்றிக்கு போராடுகிறேன். நான் வென்று வந்து ஒரு நல்ல அரசை கொடுக்கவேண்டும், மக்களுக்கு, நல்லாட்சி வேண்டும் என்று துடிக்கிறேன். இதுவரைக்கும் வரல பட்டுப்பூச்சி வளர்ப்பு வரவில்லை. இதுவரைக்கும் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வரவில்லை, மத்தியில் 18 ஆண்டுகள் இருந்தீர்கள்,
இங்கு 22 ஆண்டுகள் ஆண்டீர்கள். அப்போதெல்லாம் பெற்றுக் கொடுக்கவில்லை.நீங்களே மத்திய அரசாக இருந்தீர்கள் அல்லவா அப்போ எங்க போனீங்க ? இந்த தொகுதி வளத்திக்கான நிலவளம் சார்ந்த திட்டம் எதுக்கு இருக்கா ? என்ற கேள்விக்கு, நிலத்தை காப்பாற்றுவதற்கு வந்தவரை நில வளம் சார்ந்த திட்டம் என்கிறீர்கள் என சீமான் தெரிவித்தார்.