Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி நேரில் விசாரணை…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலைவிரித்து ஆடியது. இதற்கிடையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் சென்னை வானகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதவாளர்கள் ஈடுபட்டனர். அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையில் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில் 47 பேர் படுகாயம் அடைந்தனர். அதுமட்டுமில்லாமல் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அதன் பிறகு நீதிமன்ற உத்தரவின்படி, ஜூலை 21 ஆம் தேதி சீல் அகற்றப்பட்டு அலுவலகத்தின் சாவி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி. சண்முகம் எம்.பி. பார்வையிட்டு, அதிமுக அலுவலகத்தில் காணாமல் போன பொருட்கள், ஆவணங்கள் குறித்து கணக்கெடுத்தனர். இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி. சண்முகம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவர குறித்து பதியப்பட்ட மொத்த 4 வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலை சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையான குழுவினர் இன்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்று உள்ளனர். அதிமுக அலுவலகத்தில் அனைத்து அறைகளிலும் விசாரணை குழுவினர் ஆய்வு நடத்தி, கட்சியினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |