நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்ற நிலையில், ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
நேற்று இடைக்கால பொதுசெயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கட்சி அலுவலகம் வருவதற்குள் சீல் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள இபிஎஸ், அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறை வைத்த சீலை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.